ஞாயிறு, 15 ஜூன், 2014

இனியாவிற்கு இன்று நான்கு வயது ஆரம்பம் ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு????



எங்களின் இரண்டாவது மகாரணி இனியாவிற்கு இன்று தான் மூன்று வயது முடிவடைந்து நான்கு வயது ஆரம்பமாகிறது. ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. வீடு முழுக்க உள்ள சுவற்றில் தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார் (கையில் பேனா கிடைத்தால் அது எழுதுகிறதா என்று சோதனை செய்வதே சுவற்றில் தான்). போதாக்குறைக்கு சோபாவிலும் அவருடைய கைவண்ணம் தெரியும். உங்களுக்கு எல்லாம் தண்ணீர் குடித்தால் வாந்தி வருமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவருக்கு தண்ணீர் குடித்தால் வாந்தி வருமாம். அதைத்தான் இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.  தண்ணி குடித்தால் வாந்தி வரும் சரி, இன்றைக்கு பிறந்த நாளாக இருக்கிறதே, தலைக்கு குளிப்பாட்டுவோம் என்று தலைக்கு தண்ணீர் ஊற்றப்போனால், தலை குளிக்க வேணாம், சளி பிடிக்கும்னு” வேற சொல்றாங்க.

ஒரு நாள், ஓவியா சோபாவிற்கு கீழே உட்கார்ந்து என்னமோ செய்து கொண்டிருந்திருக்கிறார்கள், அப்போது இவுங்க சோபாவில் உட்கார்ந்து, காலை எடுத்து ஓவியாவின் தலை மேல் வைத்து, ஓவியாவை டிஸ்டர்ப் செஞ்சிக்கிட்டு இருந்திருக்காங்க. இதைப் பார்த்துக்கிட்டு இருந்த அம்மணிக்கு சரியான கோபம். உடனே, இனியாவிடம், உன் காலை எதுக்கு அக்கா தலை மேல வைக்கிற, பேசாம உன் தலை மேல் வச்சுக்கோன்னு சொல்லியிருக்காங்க, அதுக்கு இனியாவோட பதில் எப்படி இருந்துச்சுன்னா...


 (சோபாவில உள்ள கிறுக்கல்கள் எல்லாம் அவுங்களோட கைவண்ணம்) 

பிறந்த நாள் அதுவுமா, அவுங்களைப் பற்றி குறையே சொல்லிக்கிட்டு இருந்தால் நல்லா இருக்காது, அதனால், அவுங்களோட இன்றைய பிறந்த நாள் எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்.

அவுங்க காலையில எந்திரிச்சவுடனே, ஓவியா அக்கா அவுங்களுக்காக ஒரு பேப்பர்ல வாழ்த்துச் செய்தி எழுதி அவுங்க கிட்ட கொடுத்தாங்க. 



சியாந்திரம் முருகன் கோவில்ல சேக்கிழார் விழா நிகழ்ச்சியில ஓவியாயும் முதல் முறையா இனியாவும் கலந்துக்கிற நாடகம் இருந்ததுனால, அப்பப் போய் சாமி கும்பிட்டுக்காலம்னு காலையில கோயிலுக்கு போகலை.



மதியம் கேக் வாங்கிவந்து அதை இனியா கட் பண்ணி எல்லோருக்கும் ஊட்டி விட்டாங்க.









சியாந்திரம் நான் எழுதிய “சைவ நீதி” என்னும் நாடகத்தை, எங்கள் தமிழ் பள்ளி மாணவர்கள் சிட்னி முருகன் கோவிலில், சேக்கிழார் விழா நிகழ்ச்சியில் மேடை ஏற்றினார்கள். அதில் இனியாவும் மேடையேறினார். எங்களுக்கு, அவருடைய பிறந்த நாள் அதுவுமாக கோவிலில் மேடை ஏறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு வசனம் எதுவும் இல்லை, ஆனால் எங்களின் உதவி இல்லாமல் அவர் மேடை ஏறியது தான் மிகுந்த ஆச்சிரியம். 

இப்படியாக அவரின் மூன்றாவது பிறந்த தினம் இனிதாக நிறைவடைந்தது.

அந்த நாடகத்தைப் பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன்.




31 கருத்துகள்:

  1. இனியா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிறைவான இறைவனின் ஆசி உனக்கு எப்போதும் கிட்டட்டும். பிறந்த நாள் பார்டியில் கலந்து கொண்டோம் உங்கள் வலைத்தளத்தின் வழியாக.
    அம்மாவின் சொல்லுக்கு...அழகான குறும்புச் செய்கை. புகைப்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  2. இதை விட சந்தோசம் ஏது...?

    செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடி

      நீக்கு
  3. இனியா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழா

      நீக்கு
  4. இனியா செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  5. இனியாவுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  6. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் தங்கள் செல்ல மகளுக்கு உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  7. இனியா குட்டிக்கு பிறந்த நாளா ஓகோ அப்போ இப்ப பெரிய பொண்ணு இல்ல அப்போ இனி எல்லாம் சோபாவிலயும் வால்லிலயும் எல்லாம் கீறக் கூடாது இல்ல என்னம்மா அப்பிடித் தானே அது baby ங்க செய்கிற வேலை இல்ல. இனிமே நீங்க தான் யாரும் அழுக்காக்காமல் பார்த்துக்கணும் அம்மா அப்பா உட்பட ஓக்கேவா என் செல்லம் இல்ல குட் girl. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிக்கு! கல்வியும் செல்வமும் நிறையப் பெற்று இனிது வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதை சொல்லி சொல்லி தான் அவர்களை சோபாவில் கிறுக்காமல் பேப்பரில் கிறுக்குவதற்கு மாற்றுகிறோம்.

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. குறும்பு குட்டி இனியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    ஓவியா வரைந்த “கேட்டி” யும் எழுதி கொடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்தும் மிக அருமை
    படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. சொக்கன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  9. இனியாவின் சேட்டையோ சேட்டை.... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்பை

      நீக்கு
  10. குழந்தை இனியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  11. இனியாவின் வாழ்வில் என்றும் இனிமையே பெருகட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குழந்தைக்கு. அவள் வரைவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் ஒரு பெரிய வெள்ளை போர்டு வாங்கி அவளுக்கு எட்டும் உயரத்தில் பொருத்திவிடுங்கள். மூன்று வயதாகிவிட்டதால் இனி சொல்வதைப் புரிந்துநடப்பாள். இப்போதே அவளுடைய ஓவியத்திறமையை சரியான பாதையில் திருப்பிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அருமையான யோசனை. விரைவில் செயல்படுத்துகிறோம்.

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  12. இனியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் ! எப்படியோ கேக் கொடுக்காமல் அல்வா கொடுத்துவிட்டீர்க்ள்.

    புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆள்வாவாவது கிடைத்தது என்று சந்தோசப்படுங்கள்.

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  13. பெயரிலியே இனிமை தாங்கிய இனியாவிற்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜ் சார்

      நீக்கு
  14. இனியாவிற்கு இனிய வாழ்த்துக்கள்

    http://www.malartharu.org/2014/05/x-men-days-of-future-past.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது சார்

      நீக்கு
  15. குட்டிசெல்லங்களுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  16. அழகான சேட்டைகள் ....

    மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் இனியா.

    பதிலளிநீக்கு