செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஓவியா பங்கேற்ற 2014 - தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளின் காணொளிகள்

 
 


கடந்த 20 வருடங்களாக ஆஸ்திரேலியாவில், "ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் தமிழர் சங்கம்" தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளை நடத்திவருகிறது.  இந்த போட்டிகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
 
இந்த போட்டிகளில், மூன்றாண்டுகளாக ஓவியா பங்கேற்று வருகிறார். இந்த வருடம், அவர் வயதிற்குட்பட்டோர் (5-6வயது) போட்டிகளில் இரண்டு போட்டிகளிலிலும் ("கவிதை மனன போட்டி" மற்றும் "வாய்மொழித்தொடர்பாற்றல் போட்டி"), மேலும் 12 வயதிற்கு மேற்பட்டோர் போட்டியிலும்("தனி நடிப்பு போட்டி") கலந்து கொண்டிருந்தார். அவைகளின் காணொளிகளே இந்த பதிவு.
 
 
 
கவிதை மனன போட்டி:
 
 
 
 
இந்த போட்டியில், முதல் பரிசு, Aநிலை, Bநிலை, Cநிலை மற்றும்  பங்குபெற்றோற்கான நிலை ஆகிய நிலைகளில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
 
இதில் ஓவியா Bநிலைக்கான பரிசை பெற்றார்.

 
 
 
வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி: 
 
 
இந்த காணொளி முழுவதுமான காணொளி கிடையாது. கடைசி 40 வினாடிகளின் காணொளியாகும். இந்த போட்டி ஏறக்குறைய 7 மணித்துளிகள் அளவு நடந்தது, இதில் குழந்தைகள் எந்த அளவிற்கு ஆங்கிலம் கலக்காமல் தமிழில் உரையாடுகிறார்கள் என்று பார்க்கப்படுகிறது.
 
இதில் ஓவியா Aநிலைக்கான பரிசை பெற்றார்
 
 

 

 
 
 
 
தனி நடிப்பு போட்டி:
 
12 வயதிற்கு மேற்பட்டோர்க்காக இந்த போட்டி நடத்தப்பட்டது. "ஊக்கமது கைவிடேல்" என்ற கருப்பொருளில், போட்டியாளர்கள் 3மணித்துளி முதல் 5மணித்துளி வரை நடித்துக்காட்ட வேண்டும்.
 
நான் போட்டி நடத்துபவர்களிடம், ஐந்து வயது குழந்தை இப்போட்டியில்  கலந்து கொள்ளலாமா என்று கேட்டேன். அவர்களும் தாராளமாக கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் வயதில் மூத்தோர்களுடன் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். நானும் எங்களுக்கு பரிசு முக்கியமில்லை. இதில் பங்குபெறுவதை ஒரு அனுபவமாகத்தான் நினைக்கிறோம் என்று கூறி,ஓவியாவை நான்கு நாட்களுக்கு முன்பிருந்து தான் தயார் செய்ய ஆரம்பித்தோம்.
 
ஏற்கனவே நான் நெறிப்படுத்திய நிறைய நாடகங்களில் ஓவியா பங்குப்பெற்றிருந்ததால், அவருக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. அதிலும் இதில் அவருக்கு இரட்டை வேடம். வீட்டில்  அவர் பயிற்சி செய்யும்போதெல்லாம், இரு வேடங்களுக்கும் குரலை மாற்றி வித்தியாசப்படுத்தி பயிற்சி செய்தார்.
 
இந்த போட்டிக்கு மொத்தம் 8 பேர் பெயர் கொடுத்து, போட்டியன்று 4 பேர் மட்டும் வந்திருந்தார்கள். இவருடைய இலக்கம் மூன்று ஆனால் முதல் இரண்டு போட்டியாளர்கள் வராததால், இவர் தான் முதலில் நடித்துக்காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலேயே சிறிது டென்ஷன் ஆகிவிட்டார். பிறகு குரல் மற்ற வேண்டிய இடத்தில் அவரால் சரியாக குரலை மற்ற முடியவில்லை. அவ்வளவுதான் முழுவதும் டென்ஷன் ஆகி, அழுகை தொண்டை வரை முட்ட ஆரம்பித்துவிட்டது. நாங்களும் சரி, இவர் செய்ய மாட்டார், அழுது கொண்டு வந்துவிடுவார் என்று தான் எண்ணினோம். ஆனால், சமாளித்து நடிக்க ஆரம்பித்தார், அதில் சில இடங்களில் வசனங்களை மறந்துவிட்டார். நாங்கள் 3/4 இடங்களில் எடுத்து கொடுத்தோம். பிறகு முழுவதுமாக முடித்துவிட்டு தான் வந்தார்.
 
தான் செய்த அந்த முயற்சிக்கு பலனாக அவருக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், முதல் பரிசையும் எங்கள் பள்ளி மாணவர் தான் பெற்றார். ஆக முதல் பரிசு மற்றும் மூன்றாவது பரிசும் எங்கள் பள்ளிக்கு கிடைத்ததில் எனக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சி.

 
 

 
 
 
 
 
 இனியாவின் பங்களிப்பு:

இனியா வயதுக்கு 8வரிகளில் ஒரு கவிதையை மனனம் செய்து ஒப்புவிக்க வேண்டும். வீட்டில் அவரும் அழகாக சொல்லிக்காண்பித்தார்.  போட்டியில் போய் சொல்லவேண்டும் என்று கூறினால், "நான் சொல்ல மாட்டேன்" என்று பிடிவாதமாக கூறிவந்தார். சரி, போட்டியில் மற்ற குழந்தைகள் சொல்வதை பார்த்து அவரும் சொல்லிவிடுவார் என்று தான் நம்பினோம். ஆனால் அங்கும் நான் சொல்ல மாட்டேன் என்று கூறி, அழுது ஆர்பாட்டம் பண்ணிவிட்டார். அதே போல் வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டியிலும் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை.
 
அவருடைய அதிர்ஷ்டம், அவருக்கு பங்குபெற்றோர் நிலைக்கான பரிசு கிடைத்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இரு பரிசுகளையும் வாங்கிவிட்டு, அக்கா மாதிரி எனக்கு ஏன் இன்னொரு பரிசு கிடைக்கலை என்று கேட்டது தான்.
 
 
 

12 கருத்துகள்:

  1. இனியா &ஓவியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஓவியாவிற்கும் இனியாவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! வெளி நாட்டில் இருந்து கொண்டும் தமிழை வளர்க்க செய்யும் முயற்சிகளை நினைக்க பெருமையாக உள்ளது. தொடர்ந்து முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை!! இனியா,ஓவியாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! கடல் கடந்தும் இப்படி அழகாக அடுத்த தலைமுறைக்கு தாங்கள் எடுத்துச் செல்லும் பணி மிகவும் பாராட்டிற்குரியது! தங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. ஓவியாவிற்கும் இனியாவிற்கும் எனது வாழ்த்துக்கள்! புலம் பெயர்ந்து இருந்தாலும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளை நடத்தி தமிழ் தொண்டாற்றி வரும் ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் தமிழர் சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  5. ஓவியா,இனியா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஓவியா இனியா இருவரும் இன்னும் பல வெற்றிகளையும் பரிசுகளையும் குவிக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் குழந்தைகளை நீங்கள் செதுக்கும் அழகே அழகு அண்ணா!
    இருவருக்கும் என் வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
    தாங்கள் கொடுக்கும் ஊக்கமும் முன்னோர்களின் ஆசியும் பெற்று
    அவர்கள் மென்மேலும் வளரட்டும்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஓவியா,இனியா இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஓவியா இனியா இருவருக்கும் :)

    பதிலளிநீக்கு
  11. ஓவியா இனியா இருவருக்கும் எனது பாராட்டுகள்.
    மென்மேலும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு