செவ்வாய், 25 நவம்பர், 2014

ஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)

இங்கு எல்லா பள்ளிக்கூடங்களிலும் பாலர் வகுப்பிலேயே கல்விச் சுற்றுலாவை ஆரம்பித்து விடுகிறார்கள். ஓவியாவின் பள்ளியில் சென்ற மாதம், பாலர் வகுப்பு குழந்தைகளை மட்டும் இரண்டு பேருந்துகளில் “CALMSLEY HILL FARM” என்ற ஒரு பண்ணைக்கு கல்விச் சுற்றுலாக அழைத்து போயிருக்கிறார்கள்.  அன்றைக்கு காலையில் சரியாக 8.45மணிக்கு பள்ளிக்கு எல்லோரும் வர வேண்டும் என்று சொல்லி, ஒரு பிளாஸ்டிக் பையில் அவர்களுக்கு தேவையான நொறுக்குத் தீனி மற்றும் சாப்பாட்டை கொடுத்து விட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஓவியாவிற்கும் அவ்வாறே கொடுத்து 8.45மணிக்கெல்லாம், அம்மணி அவரை பள்ளிக்கு அழைத்து சென்றிருந்தார். அங்கு சரியாக 9மணிக்கு இரண்டு பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அந்த பண்ணைக்கு கிளம்பினார்கள். இரண்டு குழந்தைகளைத் தவிர மற்ற எல்லா குழந்தைகளின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். வேண்டுமானால் பெற்றோரும் அவர்களுடன் செல்லலாம். என்ன ஒருவருக்கு $28 கட்ட வேண்டும். அன்றைக்கு மதியம் பள்ளி முடியும் நேரமான மூன்று மணிக்கு சுற்றுலாவை முடித்துவிட்டு பள்ளிக்கு திரும்பிவிட்டார்கள்.


(பேருந்தில் ஏறுவதற்காக செல்லுதல்)(பேருந்துக்குள் அவரவர் விரும்பும் இருக்கைகளில் அமர்தல்)


(ஓவியாவின் சாப்பாட்டுப் பை)

ஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் கீழே உள்ள படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.


(முதன் முதலில் வாக்கியமாக எழுதி, அதற்கு ஏற்ற படமும் வரைந்தது. தப்பாக எழுதிவிட்டால், அதன் மேல் ஒரு பெருக்கல் கூறி போட்டு, மேலே சரியானதை எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்)


அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன்.நாங்கள் அந்த பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், ஒரு லீடர் (Tour Guide) வந்து எங்களை கூட்டிக்கொண்டு போனார்கள். முதலில் ஒரு ஹாலில் உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம். அப்புறம் நாங்க முதல்ல birds பார்த்தோம். அதுல parrotsம் இருந்துச்சு. அது “Hello Welcome to Farm” அப்படி பேசும்னு சொன்னாங்க. ஆனா அன்னைக்கு அது பேசலை. இரண்டு Snakes பார்த்தோம். அதுல ஒண்ணு தோல் உரிஞ்சிருந்தது,இன்னொன்னு தோலோட இருந்துச்சு. அப்புறம் நாங்க rabbits, goats எல்லாம் பார்த்தோம். Goatsயை நாங்கள் எல்லாம் தொட்டுப் பார்த்தோம். மாட்டுக்கிட்ட போய், அது பக்கத்துல உட்கார்ந்து, அதோட மடியிலிருந்து பால் கறந்தோம். அது ரொம்ப நல்லா இருந்துச்சு. மரத்து மேல இருந்த kualaவை பெஞ்ச் மேல ஏறி நின்னு பார்த்தோம். அப்புறம் நாங்க ஒரு sheepdog show பார்த்தோம். அந்த நாய் வந்து எல்லா sheepபையும் roundup பண்ணி ஒரு fenceக்குள்ள togetherரா இருக்க வச்சுது. அந்த லீடர் எங்களை அந்த ஹாலுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க. அங்க நாங்க லஞ்ச் சாப்பிட்டோம். அப்புறம் நாங்க sheepலேருந்து wool எடுக்கிற அந்த showவைப் பார்த்தோம். ஒரு அங்கிள் sheepபை upside downனா பிடிச்சு அதுக்கிட்டேயிருந்து wool எடுத்தாரு. அப்புறம் நாங்க திரும்பி பஸ்ல ஏறி ஸ்கூல்க்கு வந்துட்டோம்.


(இந்த படங்கள் அனைத்தும் - இணையத்திலிருந்து)


இது தான் அவர் என்னிடம் அன்றைக்கு அந்த சுற்றுலாவில் என்ன செய்தார்கள் என்று சொன்னது.
25 கருத்துகள்:

 1. நாங்களும் குழந்தைகளுடன் சுற்றுலா வந்ததுபோல இருந்தது. அருமையான புகைப்படங்கள். குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 2. அருமை.அழகான படங்களுடன் நீங்களும் அனுபவித்து எழுதியுள்ளது மேலும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிங் சார்

   நீக்கு
 3. அருமை. குழந்தைக்கு எங்களது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்

   நீக்கு
 4. ஓவியாகுட்டி நாங்களும் உன் கூட நல்லா சுத்திப் பார்த்தோம்.

  நல்லா படம் வரைந்து இருக்கிறாய்... keep it up

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி

   நீக்கு
 6. ஓவியாவின் படங்களை இரசித்தேன்.நாம் சிறுவர்களாக இருந்தபோது இது போன்றவைகள் நடக்கவில்லையே என நினைத்தாலும் இக்கால குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓவியாவிற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். நான் முதன்முதலில் பள்ளியில் சுற்றுலா சென்றதே ஆறாம் வகுப்பு படிக்கையில் தான்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 7. ஓவியா குட்டி! சூப்பர்! நீங்க ரொம்ப அழகா தொகுத்துச் சொல்லியிருக்கீங்க. கங்கிராட்ஸ். அழகா படம் வரைஞ்சு அதுக்கு விளக்கமும் நல்லா கொடுத்திருக்கீங்களே! வெரி குட்! உங்களுக்கு இந்த அங்கிளும், ஆண்டியும் கங்கிராட்ஸ் சொல்லறோம்..ஓகே.....Congrats!! Keep doing!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோஸ்

   நீக்கு
 8. அழகா சொல்லியிருக்கா. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   நீக்கு
 9. படத்துல ஓவியா தொட்டதும், அந்த ஆடு சந்தோஷமா சிரிக்குதே!
  குழந்தைக்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

   நீக்கு
 10. ஓவியா உன்னுடன் நானும் Farm – க்கு வந்தது போல் உள்ளது.
  மிக அருமையாக படம் வரைந்து எழுதி இருக்க.
  நீ வரைந்த படங்கள் நன்றாக உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

   நீக்கு
 11. ஓவியா நீங்க அருமையா படம் வரைந்திருக்கிறீங்க. இப்படி இன்னும் நல்லா வரையனும். உங்க சுற்றுலா போனதை அழகா சொல்லியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்டா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

   நீக்கு
 12. ஆவ்வ்வ்வ் மிக அருமை.. இதேபோலதான் இங்கும் அச்சு அசலாக இங்கும் இப்படித்தான், அந்த சாப்பாட்டு பாக்கூட இப்படித்தான் எடுத்து வரச் சொல்லுவார்கள்.. சாப்பிட்டபின் எறிந்துபோட்டு வரலாம் என்பதற்காக.

  ஓ அங்கும் யூனிஃபோம் ஸிஸ்டம்தானோ ஸ்கூல்களில்? நான் அப்படி இல்லை என நினைச்சிருந்தேன்.

  ஏன் 2014 உடன் நிறுத்தி விட்டீங்கள்.. வளர்ந்திட்டா என்றோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்று மட்டும் சொல்லோணும், இங்கு குழந்தைகளைப் படமெடுக்க அனுமதி இல்லை. ஸ்கூலுக்காக மட்டும் ரீச்சேர்ஸ் எடுக்கலாம் மற்றபடி பேரன்ஸ் எடுக்கவே கூடாது ஏனைய பிள்ளைகளை.

   நீக்கு