சனி, 15 பிப்ரவரி, 2014

அப்பூதி அடிகளின் மகனாக ஓவியா


அப்பூதி அடிகள் வாழ்கை வரலாறு நாடகத்தில் அப்பூதி அடிகள் நாடகம்  ஓவியா அவரின் மூத்த மகன் திருநாவுக்கரசராக நடித்தார். நான் செய்த ஒரு மிகப் பெரிய தப்பு,  உங்களுக்கு வேட்டி கட்டிவிடுவோம் என்று ஓவியாவிற்கு முன்பே சொல்லாதது தான். அந்த நிகழ்ச்சியன்று அவருக்கு வேட்டி கட்டிவிட்ட பாதிப்பை இந்த புகைப்படத்தை பாருங்கள்.
சும்மாவே, அவருக்கு ஆண்களை பிடிக்காது. தன் வயதையொட்டிய ஆண் குழந்தைகளிடம் சட்டென்று பழக மாட்டார். அப்படி இருக்கிறவரிடம் நான் சேக்கிழார் விழா நிகழ்ச்சியன்று தான், நீ வேட்டி கட்டிக்கணும்னு சொல்லி, ஒரு பெரிய வெள்ளை துண்டை அவருக்கு வேட்டியாக, கட்டிவிட்டோம். அதைக் கட்டிவிட்டவுடன் அவருக்கு ஒரே அழுகை வர ஆரம்பித்து விட்டது. நான் நடிக்க மாட்டேன். எனக்கு பிடிக்காத டிரஸ் போட்டுவிட்டீங்கன்னு ஒரே அழுகை. இதுல வீட்டு அம்மணி வேற ஓரேடியா விபூதியை அவுங்க கழுத்துல பூசிட்டாங்க. அதுவும்  அவுங்களுக்கு தொண்டையை உறுத்த ஆரம்பிச்சிருக்கு. எனக்கோ ரொம்ப பயாமகி விட்டது. என்னடாது, ஓவியா நடிக்கலைன்னா வேற என்ன பண்றதுன்னு ஒரே யோசனை. நான், அம்மணி அப்புறம் என்னோட மாமியார் எல்லோரும் ஓவியாவை சமாதானம் செஞ்சு எப்படியோ நடிக்க வச்சுட்டோம். மேடைல கூட முகத்தை தூக்கிவச்சுக்கிட்டே தான் நடிச்சாங்க. ஓவியாவோட இந்த அழுகையில, என்னுடைய மாமியார் தான் ரொம்ப பயந்து போய், முருகா, உனக்கு உண்டியல்ல காசு போடுறேன், எப்படியாவது ஓவியா ஒழுங்கா நடிச்சிடணும்னு முருகனுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்தாங்க.

மேலாயுள்ள படத்தில அப்பூதி அடிகளின் மகன் இலையை அறுக்கும்போது பாம்பு கடித்து இறந்து விடுவார். அவரை கோவிலில் படுக்க வைத்து திருநாவுக்கரசர் பதிகம் பாடி, அவரை உயிருடன் எழச் செய்வார். நான் சொல்லிக்கொடுத்தப்படி, தர்ஷன் ஒரு முறை பதிகம் படித்தவுடன், ஓவியா எந்திரிப்பார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் போது, அவர் எந்திரிக்கவில்லை. தர்ஷனுக்கு என்னப்பண்றதுன்னு தெரியலை. நான் பிண்ணாடியிருந்து, தர்ஷனை இன்னொரு முறை அந்த பதிகத்தை பாடச் சொன்னேன். அவரும் பாடினார். நல்லவேளையாக இரண்டாவது தடவை பாட்டு முடிந்தவுடனே, ஓவியாவும் எந்திரிச்சு, என் வயிற்றில் பாலை வார்த்தார். 

அந்த நாடகம் முடிஞ்சவுடனே, ஓவியா, இனிமே எனக்கு பாய் டிரஸ் போட்டீங்கன்னா நான் நாடகத்துலேயே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இவுங்கக்கிட்டேயிருந்து நான் கத்துக்கிட்ட ஒரு பாடம் என்னன்னா, இந்த மாதிரி குழந்தைகள் நாடகங்களில், குழந்தைகள் கிட்ட முதல்ல அவுங்க கிட்ட இந்த கதாப்பத்திரத்தில நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டுட்டு தான் அவுங்களை நடிக்க வைக்கவே ஆரம்பிக்கிறேன்.   


16 கருத்துகள்:

 1. ஆகா...! இதுவல்லவோ மகிழ்ச்சி...!

  நல்லாவே புரிஞ்சிகிட்டீங்க...! வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனபாலன். ஒரு தகப்பனாக என்னுடைய குழந்தை நாடகங்களில் பங்கேற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதே சமயம் ஒரு நாடக இயக்குனராக மற்ற குழந்தைகளையும் ஈடுப்படுத்தி நடிக்க வைத்து, அவர்களின் நடிப்பு மூலம் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறும்போது, அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

   ஆங்கிலத்தில் உள்ள பின்னூட்டம், ஓவியா தட்டச்சு செய்தது. நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன், உனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நீ தான் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று. அதனால் கணினியில் அவர்கள் தட்டுத் தடுமாறி நன்றி தெரிவித்தது தான் அந்த ஆங்கில நன்றி பின்னூட்டம்.

   நீக்கு
 2. ஓவியா ரொம்ப சமத்து அவங்க அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க இனிமேல் நல்ல பிள்ளை ஏனெனில் அவ அந்த டிரஸ்ஸில செமை அழகாக இருந்தார்கள். அத்துடன் எல்லோரும் தெய்வக் குழந்தைகள் போலல்லவா தோன்றினார்கள். ஒவியாக் குட்டி ரொம்ப cute சரியா இனி மேலும் இதேபோல் அழகாக செய்யணும் அழக் கூடாது ok தானே.ஓவியாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ.
   நான் தங்களின் இந்த கருத்தை ஓவியாவிடம் சொன்னேன். யார் அந்த ஆண்டி என்று கேட்டார்கள். நானும் தங்களின் பெயரை சொன்னேன். உடனே அவர்களுக்கு ஒரு சிரிப்பு. அவர்களைப் பொறுத்தவரையில் தன் தங்கையின் ஒஎயார் தான் இனியா, வேறு யாருக்கும் அந்த பெயர் இருக்காது என்ற எண்ணம். நான் அவர்களுக்கு புரிய வைத்தேன்.

   மேலே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தது ஓவியா.

   நீக்கு
 3. ஓவியா குட்டிம்மா அந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்கடா!!:))))
  அப்பா விடியோ போட்டிருந்த மறுபடி உன் இனிய குரலை கேட்ருக்கலாம் :((
  வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி சகோ.
  மற்ற குழந்தைகளின் பெற்றோர் அந்த நாடகத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதை சீக்கிரம் காணொளியாக இங்கு வெளியிட முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி அதை பேச வைப்பதே இந்த காலங்களில் கஷ்டம் நீங்கள் அதற்கும் மேலாக தமிழ் நாடகத்தில் நடிக்க வைத்தும் இருக்கிறீர்கள். குழந்தைகளை மட்டும் பாராட்டினால் தவறு அதனால் உங்களையும் சேர்த்தே பாராட்டுகிறேன் சபாஷ் சபாஷ் சபாஷ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க அன்ர்ணி மதுரைத் தமிழா.

   நீக்கு
 6. எதற்கு, ஓவியாவிற்கு இந்த வயதிலேயே, ஆண்கள் மீது வெறுப்பு???

  ஓவியாவிற்கு இந்த வேடம் மிகவும் பொருந்தியுள்ளது...

  நல்லவேளை ரெண்டாவதுவாட்டி எழுந்தான்களே, நல்லது...

  முருகனுக்கு உண்டியல்ல போட்டாச்சா? திருநாவுக்கரசர் தீவிர சிவ பக்தர், உண்டியலூட்டு முருகனுக்கு. ஹ ஹா...

  பதிலளிநீக்கு
 7. சுவைபடச் சொல்லி இருக்கீங்க....

  குழந்தைகளை நடிக்க வைப்பதில் இருக்கும் கஷ்டம் புரிகிறது. அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் சுலபமாகச் செய்துவிடுகிறார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்

   நீக்கு
 8. , இனிமே எனக்கு பாய் டிரஸ் போட்டீங்கன்னா நான் நாடகத்துலேயே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க

  என் வாரிசுகளும் மாறுவேட உடை போட மறுத்து ஒரே அழுகை..
  நடித்த பிறகு அந்த உடை பிடித்துப்போய் அடிக்கடி கட்டி நடித்துக்காட்டுகிறார்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
   உங்கள் வீட்டிலும் இதே பிரச்சனை தானா. குழந்தைகள் முதலில் புரியாமல் செய்து, பிறகு பிடித்துப்போய் நன்றாக செய்கிறார்கள்.

   நீக்கு