புதன், 2 ஏப்ரல், 2014

ஓவியாவின் கிராஃப்ட் வேலைப்பாடு (craft work)இந்த படம் நான் இந்தியாவில் இருக்கும்போது, இங்கு வீட்டில் அவராக யோசித்து செய்தது. படங்களை தாளில் வரைந்து அதனை வெட்டி மற்றொரு வெள்ளைத்தாளில் ஒட்டியிருக்கிறார். 

இந்த படத்திற்கான அவரது விளக்கம்:

முதல் வரிசை:

முதல் வரிசையில் இருக்கும் மூன்று படங்களும் "HUMPTY DUMPTY" எனும் ஆங்கில பாட்டிற்கான படமாம். 

முதல் படம் HUMPTY ஒரு சுவற்றில் உட்கார்ந்திருக்கிறது.

இரண்டாவது படம் அது கீழே விழுகிறது. 

மூன்றாவது படம் வீரர்களும், குதிரையும் அவரை எழுபப்ப முடியவில்லை

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.
All the king’s horses,
And all the king’s men,
Couldn’t put Humptytogether again.


இரண்டாவது/மூன்றாவது வரிசை:

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் இருக்கும் படம் "BAA BAA BLACK SHEEP" எனும் பாடலுக்கான படமாம். 

அதில் முதல் படம் - Sheep 
இரண்டாவது படம் - Master 
மூன்றாவது படம் - Dame 
நான்காவது படம் - Little Boy 


Baa baa, Black Sheep,
Have you any wool?
Yes, marry, have I,Three bags full:
One for my master,
One for my dame,
And one for the little boy
That lives in the lane!

ஒவ்வொரு பாகமாக வெட்டப்பட்ட கோழியின் படத்தை அவர்கள் பள்ளியில் கொடுத்திருக்கிறார்கள், அதனை எல்லாம் சேர்த்து ஒட்டி வண்ணம் தீட்டியிருக்கிறார். 

இதுவும் பள்ளியில் செய்தது தான், தன்னுடைய  உள்ளங்கைகளை வெள்ளைத்தாளில் வைத்து வரைந்து, அதனை வெட்டி வைத்துக்கொண்டு மற்றொரு தாளை அரை வட்டமாக வெட்டி, அதன் பின் பகுதியில் இரண்டு கைகளை உடைய தாளை ஒட்டி, பிறகு வண்ணம் தீட்டியிருக்கிறார்
இது ஒரு பூனைக்குட்டியாம். இதுவும் பள்ளியில் தான் செய்திருக்கிறார். நான் ஓவியா, இனியாவிற்கென்று வலைப்பூவை தொடங்கி எழுதுவதே, பிற்காலத்தில் அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களும் இது மாதிரி எழுத வேண்டும் என்பதற்காகத்தான். பார்ப்போம் என்னுடைய எண்ணம் ஈடேறுகிறதா என்று. 


26 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரர்
  தங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் நல்ல திறமையானவர்களாக வலம் வருவார்கள் எனும் நம்பிக்கை நல்ல அப்பாவான உங்கள் எண்ணங்களால் எனக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள். ஓவியாவின் கைவண்ணம் ரசிக்க வைக்கிறது. இது போன்ற ஆக்கத்திறன்கள் பெருகி ஒரு கண்டுபிடிப்பாளராகவும் நல்ல ஆளுமை மிக்கவராகவும் வளருவார். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் எல்லாம் சுபமாகும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கும்,கனிவான பதிலுக்கும் மிக்க நன்றி சகோ.
   தங்களின் வாக்கு படியே அவர் வந்தால் மிகவும் மகிழ்ச்சி.

   நீக்கு
 2. நீங்கள் தீர்க்க தரிசி என்றே தெரிகிறது ..ஓவியாவின் ஓவியங்களைப் பார்க்கும் போது!

  பதிலளிநீக்கு
 3. தங்களுடைய எண்ணம் நிச்சயம் நிறைவேறும் நண்பரே
  கொடுத்து வைத்த பிள்ளைகள்
  ஓவியாவிற்கும் இனியாவிற்கும் மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

   நீக்கு
 4. அசத்துறாங்க... வாழ்த்துக்கள்... மறக்காம சொல்லிடுங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.

   நான் ஓவியாவிற்கு ஒவ்வொருவரின் கருத்தையும் படித்து காண்பித்து, அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் எல்லோருக்கும் பதில் எழுதி விட்டார்.

   நீக்கு
 5. hey ஓவியா குட்டி அம்மாடி இது எல்லாம் உங்க வேலையாம்மா நம்பவே முடியலையே( wow its great) அழகா எல்லாம் வெட்டி ஒட்டி கைவேலை எல்லாம் நல்லாவே வருகுதும்மா எல்லாமே நல்ல அழகு அதிலும் கோழி இன்னும் அழகா இருக்கு keep it up.
  அப்பாவின் நம்பிக்கை ஆசை எல்லாம் நிச்சயம் நிறைவேறும். நிறைவேத்துவீங்க இல்ல.ம்....ம்....ம்..அச்சா குட்டி.தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   நான் ஒவ்வொரு முறையும் உங்களின் பேரை சொல்லி, உங்களுடைய கருத்தை படித்து காண்பிக்கும்போது, ஓவியாவிற்கு சிரிப்பும், அது எப்படி என் தங்கச்சி பேர் அவுங்களுக்கு இருக்க முடியும் என்று கேள்வியும் வரும். நானும் பொறுமையாக அவர்களுடைய பெயரை தான் உன் தங்கச்சிக்கு வைத்திருக்கிறோம் என்று சொல்லுவேன்.

   நீக்கு
 6. அட, இந்தத்தளம் எப்போ ஆரம்பிச்சீங்க... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை.

   இந்த தளம் ஆரம்பித்து இரண்டு மாதமாகிவிட்டது.

   நீக்கு

 7. குழந்தைகளின் அழகான கைத்திறனுக்கு பாராட்டுக்கள்..!!


  அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களும் இது மாதிரி எழுத வேண்டும் என்பதற்காகன எண்ணம் ஈடேறவும் வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 8. ஒரு ஓவியமே ஓவியம் வரைந்திருக்கிறதே!

  அழகாக இருக்கிறது ஓவியா.... வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு