செவ்வாய், 15 ஏப்ரல், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1(முதல் நாள் பள்ளிக்கூட வளாகத்தில்)(வகுப்பறையை நோக்கி செல்லுதல்)(வகுப்பறைக்குள் செல்லுதல்)
(வகுப்பறையில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பையை மாட்டுதல். பைக்குள் புத்தகங்கள் எல்லாம் இருக்காது. அவர்களின் லஞ்ச் பாக்ஸ், ஜாக்கெட் போன்றவைகள் தான் இருக்கும்)இந்த தொடர் பதிவில் ஓவியா, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை  எங்களிடம் பகிர்ந்து கொண்டதையும், இங்கு  அவருக்கு  எவ்வாறு தொடக்க கல்வி (primary education) சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இங்கு நான் சொல்வதெல்லாம் இங்கில்பெர்ன் பள்ளிக்கூடம்(Ingleburn Public School) பற்றி தான் ).


ஓவியா பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து முதல்  பருவம்(TERM) முடிந்து இப்போது இரண்டு வார விடுமுறையில் இருக்கிறார். இங்குள்ள பள்ளிக்கூடங்கள் எல்லாம் சனவரி மாத கடைசியில் ஆரம்பித்து டிசம்பர் மாதம் பதினைந்து தேதிகளில் முடிவு பெரும்.  ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பருவமாக (TERM) சொல்லப்படுகிறது. முதல் மூன்று பருவங்கள் முடிவடையும்போது, இரண்டு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. கடைசி பருவத்தில் தான் ஆறு வார விடுமுறை அளிக்கப்படுகிறது.  காலை 9  மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது. இதில் 11 மணியிலிருந்து 11.30  மணிக்கு இடைவேளை. பிறகு மதிய உணவிற்கான இடைவேளை 1மணியிலிருந்து 1.40 மணி வரை. இதில் முதல் பத்து நிமிடம் சாப்பிடுவதற்கான நேரம். அடுத்து வரும் முப்பது நிமிடங்களும் விளையாட்டு நேரம். பத்து நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, 40 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ஆனால் எல்லா குழந்தைகளும் முதல் 10 நிமிடத்திற்குள் என்ன சாப்பிடுகிறார்களோ,அது தான் அவர்களின் மதிய உணவு. பிறகு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பள்ளியிலேயே உணவகமும் இருக்கிறது. அதற்கு காலையிலேயே ஆர்டர் செய்து விடவேண்டும். "பள்ளி வங்கி"(School Banking) ஒன்று ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையில் "Common Wealth Bank" என்ற வங்கி நடத்துகிறது. இதில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணத்தை, தங்களின் பெயரிலியே அந்த வங்கியில் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம். 


ஒவ்வொரு திங்கட் கிழமை காலையிலும் எல்லா வகுப்பு மாணவ மாணவியரும் ஒருங்கிணைத்து அசெம்ப்ளி (assembly) நடக்கும். அப்போது கொடியேற்றம் நடக்கும். இந்த அசெம்ப்ளியையும், கொடியேற்றத்தையும் பள்ளித் தலைவர்களாக (School Leader) விளங்கும் மாணவ மாணவியர்களே நடத்துவார்கள்.அப்போது ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தையும் , பள்ளிக்கான பாடலையும்  படுவார்கள். 
ஓவியா இப்போது பாலர் பள்ளியில் (kinder garden) படிக்கிறார்.  ஐந்து வயதில் பாலர் கல்வி (kinder garden), ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு என்று படிக்க ஆரம்பிப்பார்கள். தொடக்க பள்ளியானது (Primary School ) பாலர் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு (Kinder to Year6) வரை உள்ள பள்ளிக்கூடம். உயர் நிலைப் பள்ளியானது (High School) ஏழாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம். 


இங்குள்ள தொடக்க கல்வி முறை சற்றே வித்தியாசமாக இருக்கிறது. அதாவதுபாலர் வகுப்பிற்கு, ஆங்கிலம் மற்றும் கணிதம் தான் பாடங்கள். அந்த இரண்டு பாடங்களையும் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம். 

14 கருத்துகள்:

 1. கொடுத்து வைத்த குழந்தைகள்! இங்கு இரண்டரை வயதிலேயே பள்ளி என்னும் சிறையில் தள்ளி தேவையில்லாததையெல்லாம் திணித்து குழந்தையை கொடுமை படுத்துகிறார்கள்! தொடர்ந்து பகிருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. நமது நாட்டிலும் ஒரு காலத்தில் ஐந்தாவது வயதில்தான் குழந்தைகளைச் சேர்த்தார்கள். இன்று Lower Kinder Garden. Upper Kinder Garder இருப்பது போதாதென்று Pre Kinder Garden வேறு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. // வங்கியில் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம் // அட...!

  பதிலளிநீக்கு
 4. நல்ல விடயம் சீருடை அணிவது அத்துடன் சேமிப்புப் பழக்கம் ம்...ம்//ம் நல்லது. அத்துடன் நல்ல மகிழ்ச்சியாகவே உள்ளார். so cute நன்றாக படிக்கவேண்டும் ஓவியா சரிதானே. good girl.
  வாழ்த்துக்கள் ... ! ஓவியா

  பதிலளிநீக்கு
 5. குழந்தையின் மகிழ்வில் மனம் மயங்கிப் போகிறது ஓவியாவிற்கு
  என் இனிய வாழ்த்துக்கள் .திட்டமிட்டு வாழும் வாழ்வே தித்திக்கும்
  என்ற கருத்தைத் தாங்கி நிற்கிறது பகிர்வு உங்களுக்கும் என் இனிய
  வாழ்த்துக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
 6. நம்ம ஊர் பள்ளிகளில் குழந்தைகளின் சேமிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்க சஞ்சாயிகா திட்டம் இருப்பதைப் போன்றே அங்கேயும் பள்ளி வங்கி இருப்பது அறிய மகிழ்ச்சி !

  பதிலளிநீக்கு
 7. இனியாவிற்கு என் வாழ்த்துக்கள் !
  சேமிப்பு பழக்கம் அருமை சகோ!
  இதில் சில விஷயங்கள் நம் அரசுப்பள்ளிகளிலும் உள்ளன சகோ(trimester)

  பதிலளிநீக்கு
 8. புதிய தகவல்கள்.... இந்தியாவில் மூன்று வயதிலேயே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அதுவும் தில்லியில் காலை ஏழு மணிக்கே பிள்ளைகளை அழைத்துச் செல்ல பேருந்து/வாகனம் வந்து விடுகிறது!

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ஓவியா ...
  நான் தொடர்ந்து வாசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பதிவுகள் இவை ...நன்றி

  பதிலளிநீக்கு