புதன், 28 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
இந்த பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் எவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். அதாவது வகுப்பறைக்குள் நடப்பதை ஓவியா ஞாபகம் வைத்து சொல்வதையும், வகுப்பில் அவர்கள் பயன்படுத்துகின்ற பயிற்சி தாள்களையும் வைத்து தான் நான் இங்கே எழுதுகிறேன்.

ஓவியா பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தபொழுது, அவருக்கு A,B,C,D பாட்டாக சொல்ல மட்டும் தான் தெரியும். மற்றபடி அவருக்கு எழுத்துக்களையெல்லாம் பார்த்துச் சொல்லத் தெரியாது. அவருடைய பெயரை மட்டும் எழுதத் தெரியும். அதே மாதிரி எண்களில் ஒன்று முதல் பதினைந்து வரை மட்டும் தான் சொல்லத் தெரியும். நிறங்களை சொல்லத் தெரியும். மற்றபடி வேறு எதுவும் தெரியாது. ஆனால் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து ஏறக்குறைய நான்கு மாதங்களில் அவருக்கு A,B,C,D எப்படி கேட்டாலும் தெரியும், மேலும் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். இரெழுத்து, மூன்றெழுத்து வார்த்தைகள் எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்கிறார். எண்களில் ஒன்று முதல் முன்னூறு வரை சொல்கிறார். ஒரு அடுக்கு (single digit) எண்களை கூட்டவும், கழிக்கவும் தெரிகிறது. எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சிரியம். இத்தனைக்கும் நாங்கள் வீட்டில் தனியாக சொல்லிக்கொடுப்பது இல்லை. (வெறும் வீட்டுப்பாடங்கள் மட்டும் தான் சொல்லிக்கொடுக்கிறோம்).

ஓவியாவிடம் இன்றைக்கு என்ன படித்தீர்கள் என்று தினமும் கேட்கும்பொழுதுதான், இங்கு சொல்லிக்கொடுக்கும் முறையே வித்தியாசமானது என்று தெரிந்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் ஆங்கிலப் பாடம்,கொஞ்ச நேரம் கணிதப்பாடம், கொஞ்ச நேரம் ஏதாவது கிராஃப்ட் வேலைப்பாடு செய்வது,கொஞ்ச நேரம் கதை படிப்பது (story reading) என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆங்கிலத்தை A – Apple, B – Bat என்று சொல்லிக்கொடுக்கமாட்டார்களாம். அதற்கு பதில் “போனிக்ஸ் (PHONICS) முறையில் தான் சொல்லிக்கொடுப்பார்களாம். அதாவது வார்த்தைகளை உச்சரிக்கும்போது ஏற்படுகிற ஒலியை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அடிக்கடி ஓவியா, ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி,அதனுடைய முதல் வார்த்தை இந்த எழுத்தில் ஆரம்பிக்கிறது என்று சொல்லுவார். அதே மாதிரி, காரில் செல்லும்போது, சாலையில் தெரியும் பெரிய எழுத்துக்களை எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். நாம் ஏதாவது ஒரு வார்த்தைக்கு எழுத்துக்கோர்வையை (spelling) கேட்டால், உடனே அந்த வார்த்தையை phonic முறையில் உச்சரித்து பார்த்து, எழுத்துக்கோர்வையை சொல்ல முயற்சிக்கிறார். வகுப்புகளில் worksheets போன்றவற்றை பயன்படுத்தி எழுதவும், படிக்கவும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்த worksheets சிலவற்றை கீழே பார்க்கலாம்.

இதே மாதிரி worksheetsசை பயன்படுத்தித் தான் எண்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.அந்த worksheetsகளில் எல்லாம் அவர்களை கலர் பண்ணச் சொல்லி, வகுப்பை போர் அடிக்காமல் சுவாரசியமாக கொண்டு செல்கிறார்கள். நோட்டுக்களையே அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. எல்லாம் இந்த மாதிரி worksheets தான். இதையெல்லாம் ஒரு ஃபைலில் போட்டு வைக்கச் சொல்கிறார்கள். 


(இப்படி தான் பேட்டர்ன் (pattern) கான்செப்டை கற்றுக்கொடுக்கிறார்கள்) 

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் ஓவியா என்னிடம், “அப்பா உங்களுக்கு 3 + 4 = என்னவென்று தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று சொன்னவுடன், இது கூட உங்களுக்கு தெரியலையா என்று சொல்லி, இரண்டு கைகளையும் பயன்படுத்தி 7 என்று கூறி, இது மாதிரி தான் எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தார்கள் என்று சொன்னார்கள்”. அதே மாதிரி இங்கு கழித்தலை, மாணவர்களுக்கு “from 5 take 3 = 2 “ என்று தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இவை போக வாரவாரம் புதன்கிழமை நூலகத்திலிருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து கொண்டு வரலாம். அவரவருக்கு பிடித்தமான புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். அந்த புத்தகத்தை தினமும் அம்மணி ஒரு முறை படித்துக்காட்டுவார்கள். பள்ளியிலேயே நூலகப் புத்தகப்பை என்று ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

(இந்த வார நூலகப் புத்தகம்)(ஒவ்வொரு பக்கங்களிலும் இரண்டு அல்லது மூன்று வரிகள் தான் இருக்கும்)

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று வகுப்புகளில் சில சைட் (sight words) வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு “it “, “up”, “sit” போன்ற நான்கைந்து வார்த்தைகளை சொல்லிக்கொடுத்து அந்த வார்த்தைகளையே அட்டைகளில் பிரிண்ட் எடுத்து வீட்டுப்பாடமாக கொடுக்கிறார்கள். வீட்டுபாடத்தையும் எவ்வாறு விளையாட்டாக செய்யச் சொல்கிறார்கள் என்பது பற்றி மற்றொரு பதிவில் சொல்லுகிறேன்.


25 கருத்துகள்:

 1. படங்கள் எதுவும் காட்சிப்படவில்லை..

  உற்சாகமான கற்றல் முறை மகிழ்ச்சியளிக்கிறது..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "//படங்கள் எதுவும் காட்சிப்படவில்லை..//" - நீங்கள் சொல்வது புரியவில்லை அம்மா.

   தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அம்மா .

   நீக்கு
 2. நல்ல கல்வி முறை ...ஓவியா என்று பெயரை எழுதி இருப்பதே ஒவியமாத்தான் தெரிகிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி பகவான்ஜீ.

   நீக்கு
 3. அருமையான முறை ஐயா
  தங்கள் மகள் கொடுத்து வைத்தவர்
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

   நீக்கு
 4. ஓவியாவிற்கு பாராட்டுக்கள்.
  Killergee
  www.Killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கில்லர்கீ

   நீக்கு
 5. மேலை நாடுகளில் மனப்பாடம் செய்ய சொல்லாமல் புரிய வைக்கிறார்கள். நம்பிக்கையை விதைக்கிறார்கள் குழந்தைகளை எந்த சமயத்திலும் மட்டம் தட்டுவதில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது அனைத்தும் அனுபவப்பூர்வமான உண்மைகள். இதனால் தான் இங்கு குழந்தைகள் வீட்டில் இருப்பதை விட, பள்ளிக்கு செல்லவே விரும்புகிறார்கள்.

   நீக்கு
 6. அருமையான பள்ளிகள் கற்பித்தல் முறை மிகச்சிறப்பு. அதை எங்களுக்கு எடுத்துக்க்காட்டிய விதம் மிக நன்று . மேலை நாடுகளின் கல்விமுறையை அறியச்செய்தமைக்குமிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜ் சார்.

   நீக்கு
 7. கல்வி முறை சிறப்பாக இருக்கிறது! விரிவான பகிர்வுக்கு நன்றி! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுரேஷ்

   நீக்கு
 8. எளிய முறையில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை மிக அருமையாக கற்றும் வரும் ஓவியாவிற்கு எனது பாராட்டுக்கள்.
  Good on you Oviya
  ஆஸ்ட்ரேலியா நாட்டு ஆரம்ப கல்வி முறை பற்றி விளக்கமாக எழுதியதிற்கு பாராட்டுக்கள் திரு. சொக்கன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி

   நீக்கு
 9. ஓவியாக் குட்டிக்கு வாழ்த்துக்கள் ....! this is really great! keep it up. ok kutty.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

   நீக்கு