ஞாயிறு, 11 மே, 2014

ஓவியா இனியாவின் அன்னையர் தின பரிசுகள்


இங்கு இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு அத்துப்படி. அந்த அளவிற்கு பள்ளியிலும் சரி, டே கேர் நிலையங்களிலும் சரி, அந்த தினங்களை பிரபலப்படுத்தி விடுவார்கள். இனியா வாரத்திற்கு இரு நாட்கள் டே கேர் செல்கிறார்கள். அன்னையர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்தபடியால், அந்த டே கேரில் சென்ற வாரமே அன்னையர் தினத்தை கொண்டாடி விட்டார்கள். அன்றைக்கு அங்கு வரும் அனைத்து குழந்தைகளின் அன்னையர்களையும் அழைத்து கேக் எல்லாம் வெட்டி பிரமாதப்படுத்திவிட்டார்கள். போதாக்குறைக்கு, குழந்தைகளுக்கு அவர்களே அட்டையில் ஒரு கைவினைப் பொருளை செய்து அதில் அன்னையர்களை வாழ்த்தி எழுதியிருக்கிறார்கள்.  அந்த கைவினைப் பொருளை குழந்தைகளின் கையில் கொடுத்து, அதை அவர்கள் தங்கள் அன்னையிடம் கட்டிப்பிடித்து “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதில் இனியா தன் தாய்க்கு கொடுத்த அன்பு பரிசு தான் கீழே உள்ள படம்.

ஒரு அட்டையில், சிறிய கைப் பை (handbag) மாதிரி செய்து, அதில் உள்ளே அன்னையரை போற்றக்கூடிய வசனங்களை எழுதி கீழே இனியாவின் பெயரைப் போட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் தன் தாயிடம் “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.         

இது டே கேர் நிலையத்தில் நடந்த விஷயம். ஓவியாவின் பள்ளிக்கூடத்தில், அன்னையர் தினத்தில், அன்னைக்கு பரிசு கொடுப்பதற்காகவே ஒரு ஸ்டால் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதில் $4, மற்றும் $6க்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வைத்து, குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். ஓவியாவும், நீங்கள் வாரா வாரம் வங்கியில் போடுவதற்காக எனக்கு கொடுக்கும் பணத்திலிருந்து நான்கு டாலர்களை எடுத்துக் கொடுங்கள், நான் உங்களுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். நாங்களும் நான்கு டாலரை கொடுத்தோம். ஓவியாவும் அந்த பள்ளிக்கூடத்திற்குள் இருக்கும் கடையில் என்ன வாங்குவது என்று ரொம்ப யோசித்து, இறுதியாக வாங்கியது தான் கீழே உள்ளே படம்.இதுவும் பார்க்க ஒரு குட்டி கைப் பை (handbag) மாதிரி தான் தெரியும். ஆனால் உள்ளே பார்த்தால்,ஒரு பக்கத்தில், சில்வரில் ஒரு சின்ன கத்தி, கத்திரிக்கோல், நெகம் வெட்டும் கருவி மற்றும் ஒரு போர்ஸிப் போன்ற ஒரு கருவி (இதற்கு எனக்கு சரியான பேர் தெரிய வில்லை). மற்றொரு பக்கத்தில் ஒரு சின்ன அட்டையை மட்டும் வைத்திருக்கிறார்கள். அதில் ஓவியா,HAPPY MOTHERS DAY”LOVE FROM OVIYA” என்றும், இவ்விரு வாக்கியங்களை சுற்றி, இருதய படங்களை வரைந்து, தன் அன்னைக்கு பரிசு அளித்திருக்கிறார்.


இந்த இரண்டு பரிசுகளையும் பெற்றுக்கொண்ட என் வீட்டு அம்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னிடம், "நீங்கள் மகளிர் தினத்துக்கு எனக்கு ஒரு பரிசையும் கொடுக்கலை, ஆனால் என் செல்வங்கள் எனக்கு அன்னையர் தினத்துக்கு மறக்க முடியாத பரிசை அளித்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்தாவது நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு பாடம் எடுத்து விட்டார்கள்.  (நான் கணவனாக அமைந்ததே பெரிய பரிசு என்று அம்மணிக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதோ!!!!)

19 கருத்துகள்:

 1. பரிசுகள் அருமை...
  ஆட்டியூட் ரொம்ப நல்லா இருக்கு குழந்தைகளிடம்...

  பதிலளிநீக்கு
 2. #(நான் கணவனாக அமைந்ததே பெரிய பரிசு என்று அம்மணிக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதோ!!!!)#
  இதை அவர்களாக நினைத்தால் பரிசு ,இல்லையெனில் தண்டனையாய் நினைக்கிறார்கள் என்று அர்த்தம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடாடா!!!! நீங்கள் ஒருத்தர் போதும் ஐயா. என் மனைவிக்கு தெரியலைன்ன கூட, நீங்களே சொல்லிக்கொடுத்துடுவீங்க போல இருக்கே!!!!!!!!!!!!!!!!!.

   நீக்கு
 3. ரொம்ப அழகா இருக்கு உங்க மகள்கள் அம்மாவுக்கு தந்த பரிசு !!.
  வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் ஓவியா அண்ட் இனியா !

  பதிலளிநீக்கு
 4. ஆகா...! ஆகா...!

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. ஹாய் ஓவியா இனியா சூப்பர்டா. அம்மாவுக்கு கொஞ்சம் வேலைகளிலும் உதவி செய்தா அம்மா இன்னும் மகிழ்வார். அம்மாவுக்கும் கொஞ்சம் ஒய்வு கிடைக்கும் அல்லவா.

  என்ன சகோ முறைப்பாடு அவர் உங்களுக்கு தாய், மனைவி, சகோதரி, நண்பி என்று எல்லாம் சொல்வீர்கள் இப்போ என்ன மரியாதையாக கொடுக்க வேண்டியதை கொடுத்துவிடுங்கள். இல்லையேல் ரொம்பக் கஷ்டப் படுவீர்கள். பூரி கட்டை வீட்டில் உண்டு தானே. இல்ல
  சும்மா ஞாபக படுத்தினேன். நன்றி வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

   பூரி கட்டை எல்லாம் வீட்டில் இருக்கு சகோ. நீங்க வேற அதை நியாபகப் படுத்தாதீங்க!!!

   நீக்கு
 6. குழந்தைகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். உங்கள் துணைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்... கிச்சனில் கடும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்கும் நன்றி மதுரைத் தமிழா.

   அன்னையர் தினத்தில் நான் செய்யும் வேலையை நியாபகப்படுத்தி என்னையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 7. அருமையான பரிசு தான்....

  அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  பரிசு கொடுத்த செல்லக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு