செவ்வாய், 10 ஜூன், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)






இந்த பதிவுல ஓவியாவிற்கு, பள்ளியில் கிடைத்த வெகுமதிகளைப் பற்றி சொல்கிறேன்.

ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலும் நடக்கும் அசெம்ப்ளியைப் பற்றி முதல் பகுதியில சொல்லியிருப்பேன். மற்ற நாட்களில் பாலர் வகுப்புகளுக்கு தனியாக அசெம்ப்ளி நடக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை(வெள்ளிக்கிழமையில்) , பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலும், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலும் தனியாக ஒரு சின்ன ஹாலில் அசெம்ப்ளி நடக்கும். இந்த அசெம்ப்ளியானது காலை 11.30 மணிக்கு ஆரம்பித்து 12.30மணிக்கு முடிவடையும். இதிலும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். இதில் விருது வாங்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதனால் அந்த பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்கள் குழந்தை வாங்கும் விருதை கண்டுக்களிக்கலாம். இந்த அசெம்ப்ளியில்  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகுப்பு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை 5 நிமிடத்திற்கு வழங்குவார்கள். பிறகு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பார்கள். இதில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து முதல் வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில்,ஓவியா “Reading Skills”க்காக ஒரு “MERIT AWARD” வாங்கினார்.  


இது போக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு “Being A Safe and Respectful Learner” என்ற ஒரு பச்சை அட்டையை வகுப்புகளில் வழங்குவார்கள். அவ்வாறு ஒரு மாணவன் 20 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால், அவனுக்கு ஒரு “Bronze Award” கிடைக்கும். 40 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Silver Award” கிடைக்கும். 60 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Gold Award” கிடைக்கும். 80 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Diamond Award” கிடைக்கும். இந்த விருதுகள் அனைத்தும் சான்றிதழ்கள். ஒரு வருடத்திற்குள் எவ்வளவு பச்சை அட்டைகளை வாங்குகிறோம் என்பதை பொறுத்து இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளும் வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில் கொடுக்கப்படும். இந்த வருடத்திற்காக கொடுக்கப்படும் “Bronze Award” விருதினையும் ஓவியா பெற்றார்.


(காணொளி சற்று சரியாக வரவில்லை)





                    (நாங்கள் மகளிர் கூட்டணியாக்கும்)

ஒரு வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில், ஒவ்வொரு வகுப்பும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்து காட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சியை வேறொரு வகுப்பு செய்யப்போவதை, ஓவியாவின் வகுப்பிலிருந்து, ஓவியா அறிமுகம் செய்து வைக்கிறார்.





பாலர் வகுப்புகளில் இருந்தே,  குழந்தைகளுக்கு மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

ஓவியா வகுப்பில், கணக்கு பாடத்தில் முதலாவதாக வந்ததால், அவரின் ஆசிரியை அவருக்கு இந்த பேனாவை பரிசாக அளித்திருக்கிறார்.




அடுத்த பகுதியில், பள்ளிக்கூடத்தில் எந்த அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது என்பதையும், பச்சை அட்டை மாதிரி மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு அட்டைகளும் வழங்கப்படுகிறது. அவைகள் எதற்காக வழங்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.







26 கருத்துகள்:

  1. தங்கத்திற்க்கு "Bronze medal" கிடைத்ததில் மகிழ்ச்சி. :-)

    பதிலளிநீக்கு
  2. இப்படித்தான் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் விதமா இருக்கனும். நம்மூர்ல மனப்பாடம் செய்து ஒப்புவிக்குற முறைதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. பேனா ரொம்ப அழகா இருக்கு ஓவியாவை போல:))
    ஓவியா என்ன இயல்பாய் மேடையில் நிற்கிறார்! //நீ கலக்குடா செல்லம்//
    அவள் இன்னும் பல அவார்ட்ஸ் வாங்க வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  4. ஹாய் ஓவியா குட்டி நன்றாக கலக்குடா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும் நிறைய அவோடுகள் வாங்க என் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  5. குழந்தை ஓவியாவிற்கு எனது நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஓவியா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்க நன்றாக படித்து நிறைய அவார்ட்ஸ் வாங்கனும் சரியா.
    உங்க மிஸ் தந்த பேனா ரெம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள் செல்லம்.

    பதிலளிநீக்கு
  7. ஓவியா, இன்னம் பல awards, விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. குழந்தை ஓவியாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மேலும் மேலும் சிறப்புற இனிய வாழ்த்துக்கள். குழந்தைகளிலிருந்தே அவர்களை மேடையேற்றி சபைக்கூச்சத்திலிருந்து விடுபடச்செய்யும் முறையைக் கண்டு நானும் வியந்திருக்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சொக்கன்.

    பதிலளிநீக்கு
  9. " பாலர் வகுப்புகளில் இருந்தே, குழந்தைகளுக்கு மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது."

    ஆம். ஆச்சரியமாக இருக்கிறது.
    பல அவார்டுகள் வாங்க...ஓவியாவிற்கு என் வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  10. குழந்தை பருவத்திலேயே மேடையேற்றி கூச்சத்தை போக்கிவிடுவது வரவேற்கத்தக்க செயல்.
    வெல்டன் ஓவியா......

    பதிலளிநீக்கு
  11. ஓவியாவிற்கு பள்ளியில் கிடைத்த வெகுமதிகளுக்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான தொகுப்பு
    நல்ல நுட்பமான தகவல்கள் ஆசிரியர்களுக்கு
    நன்றி
    http://www.malartharu.org/2014/02/jeeva-freedom-fighter.html#more

    பதிலளிநீக்கு
  13. ஓவியாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு பள்ளியில் படிக்கும் ஓவியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல பரிசுகள் வெல்லட்டும்.

    பதிலளிநீக்கு
  15. ஓவியவிற்கு வாழ்த்துக்கள்.! ஓவியா செல்லம் இன்னும் நிறையப் பரிசுகள் வாங்கணும்.ஓகேயா..?!

    பதிலளிநீக்கு