செவ்வாய், 11 நவம்பர், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 6 (பள்ளியில் செய்திகள் வாசிக்கும் நேரம்)



                                (படம் உதவி - கூகிள் ஆண்டவர்)



ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


பள்ளிக்கூடத்தில் இப்போது கடைசி பருவம் (last term) நடந்து கொண்டிருக்கிறது. சென்ற பருவத்தில் (3rd term), ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் மாணவர்கள் ஒரு நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஓவியாவிற்கு செவ்வாய்க்கிழமையாக அமைந்திருந்தது. இதனை "நியூஸ் டைம்(news time)" என்று கூறுகிறார்கள். அந்த பருவம் ஆரம்பித்த முதல்வாரத்தில் இது சம்பந்தமான கடிதத்தை கொடுத்து விட்டார்கள். 

நாம் அவர்களுக்கு உதவி செய்து அவர்களை தயார் படுத்த வேண்டும். ஆனால் ஓவியாவைப் பொறுத்தவரையில்,நாங்கள் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. அவர்களை யோசிக்க சொல்லி, சிலவற்றை மட்டும் தமிழில் கூறினோம். அதனை அவர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக்கொண்டு பேசியிருக்கிறார். 

கீழ்கண்ட தலைப்புகளில் ஒவ்வொரு வாரமும் அவர்கள் பேச வேண்டும். 

1. சென்ற விடுமுறையில் நான் என்ன செய்தேன்.
2. எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்
3. எனக்கு மிகவும் பிடித்த பொம்மை
4. என்னுடைய தோட்டத்திலிருந்து ஏதாவது ஒன்றை பற்றி பேசுதல்
5. பிற்காலத்தில் நான் என்னவாக வர விரும்புகிறேன் 
6. தாய்,தந்தை,தாத்தா,பாட்டி போன்றவர்களை பேட்டி காணுதல் - அவர்கள்      
   பெரியவர்களாக   ஆகும்   போது என்னவாக வர வேண்டும் என்று   
   விரும்பினார்கள்
7. நான் வீட்டில் எவ்வாறு உதவி செய்வேன் 
8. பெற்றோர்கள் குழந்தையாக இருக்கும்போது, அவர்களுக்கு மிகவும் பிடித்த 
   விளையாட்டு பொம்மை
9. இனி வரும் விடுமுறையில் நான் என்ன செய்வேன்






முதல் இரண்டு வாரமும், வீட்டு அம்மணி தான் அந்த தலைப்புகளை சொல்லி அவரை பேச வைத்து பார்த்திருக்கிறார். மூன்றாவது வாரத்தில் தான், நீ எப்படி வகுப்பில் பேசுவாய், அது மாதிரி பேசிக்காட்டு என்று கூறி, அதனை காணொளியாக எடுத்தேன். அந்த காணொளி தான் கீழே உள்ள காணொளி. 




பாலர் வகுப்புகளிலேயே, வெறும் படிப்பதோடு மட்டுமல்லாமல் இம்மாதிரியான ஒரு நிகழ்வை ஏற்படுத்தி, மாணவர்களின் கற்பனைத் திறனையும், பல பேருக்கு முன்பு தைரியமாக நின்று பேசும் திறனையும் வளர்ப்பது என்பது மிக பெரிய விஷயம். 

இம்மாதிரியான ஒரு நடைமுறையை நம்மூரில் நான் படிக்கின்ற காலத்தில் ஏற்படுத்தியிருந்தால், ஒரு வேளை நான் மேடை பேச்சாளராகி இருப்பேனோ, என்னவோ!!!!

13 கருத்துகள்:

  1. ஓவியாக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.

    மேடைப்பேச்சாளர்னா ? எப்படி ? அரசியல்வாதியாகவா ? அப்படீனாக்கா, நான் எதிரியாகிடுவேனே....

    பதிலளிநீக்கு
  2. ஓவியா...நல்லா பேசுகிறாய்...செல்லம்..அப்படின்னு நான் சொன்னதை தங்கள் மகளிடம் சொல்லவும்


    பாலர் வகுப்புகளிலேயே, வெறும் படிப்பதோடு மட்டுமல்லாமல் இம்மாதிரியான ஒரு நிகழ்வை ஏற்படுத்தி, மாணவர்களின் கற்பனைத் திறனையும், பல பேருக்கு முன்பு தைரியமாக நின்று பேசும் திறனையும் வளர்ப்பது என்பது மிக பெரிய விஷயம் //

    ஆம். சிறுவயதிலே பழக்கப் படுத்துவது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். நிறைய கற்றுக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

    நாலு பேர் முன்னாடி நிற்கிறதுக்கே..பயமா..இருக்கு..அப்புறம் எப்படி பேசுறது..ம்...

    இப்போது உள்ள தலைமுறைகள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். அவர்களை பார்த்து மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படித்தான் நாலுபேர் முன்னாடி பேசனும்னா ''பய'' பயப்புடுவேன்.

      நீக்கு
  3. Congrats Oviya :) வெளி நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் இம்முறை இருக்கு !!இதெல்லாம் பிள்ளைகளை ஊக்குவிக்கும் ..
    நானேல்லாம் பயந்தே அழிஞ்சேன் :)நம்மூரிலும் தமிழ் ஆங்கில பேச்சுபோட்டி நடத்துவாங்க ஆனா கிண்டர்கார்டன் நிலையிலேயே அனைவரையும் இப்படி செய்யவைச்சா நிறைய பேச்சாளர்கள் உருவாகி இருக்கலாம் .
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஓவியாவின் பெற்றோருக்கும் .

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமை!
    பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அரிய செயல்களும் ஊக்குவிப்பும்!

    வாழ்த்துக்கள் ஓவியாக் குட்டிக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும்!

    பதிலளிநீக்கு
  5. சகோதரரே..! வாழ்த்துகள் தங்களுக்கும் குட்டீஸ் இருவருக்கும் ,தங்களின் துணைவியாருக்கும்.
    தங்களைப்போலவே எனக்கும் இரு மகள்கள்.
    நாம் அடையாத,உயரத்தை நம் பிள்ளைகள் அடைவார்கள்..!

    பதிலளிநீக்கு
  6. ஓவியா பேசுவதைக் கேட்கும்போது ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் வரும் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ என்ற பாடலில் ‘கான்வெண்ட் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் சங்கீதம் பாடுதம்மா.’ என்ற வரிகளை நினைவூட்டியது. ஓவியாவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் ஓவியா. இங்குள்ள பாடசாலை நடைமுறைகள், திட்டங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை, தைரியத்தினை ஏற்படுத்தி, பயத்தினை போக்கிறது.
    //சிலவற்றை மட்டும் தமிழில் கூறினோம். அதனை அவர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக்கொண்டு பேசியிருக்கிறார்.// சூப்பர். நல்லதொரு செயல்.பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் சகோ.



    பதிலளிநீக்கு
  8. ஓவியா செல்லத்திற்கு முதலில் எங்க்ள் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

    பாலர் வகுப்புகளிலேயே, வெறும் படிப்பதோடு மட்டுமல்லாமல் இம்மாதிரியான ஒரு நிகழ்வை ஏற்படுத்தி, மாணவர்களின் கற்பனைத் திறனையும், பல பேருக்கு முன்பு தைரியமாக நின்று பேசும் திறனையும் வளர்ப்பது என்பது மிக பெரிய விஷயம். //

    உண்மையே நண்பரே! நம் ஊரில் வகுப்புகளில் இப்போதும் இது போன்ற நிகழ்வுகள் இல்லாதது குறையே!

    கடைசி பாரா பஞ்ச்! இனியும் செய்யலாமே நண்பரே! நீங்கள் தான் நாடகத்தில் அருமையாக நடிக்கின்றீர்களே! அது போலத்தானே மேடைப் பேச்சும்...உங்களால் முடியாததா என்ன!!!

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான கல்வி முறை. குழந்தைகளின் தன்னம்பிக்கையை நன்கு வளர்க்கும்.
    ஓவியாவிற்கு எனது பாராட்டுக்கள் திரு சொக்கன்.

    Good on you Oviya

    பதிலளிநீக்கு
  10. ஓவியா பாப்பா மிகவும் அழகாக பேசுகிறாள். ஆரம்ப வகுப்புகளிலேயே இந்த பயிற்சியைக் கொண்டுவருவதால் மேடைக்கூச்சம் குழந்தையிலேயே விட்டுப்போய்விடுகிறது. இங்கிருக்கும் கல்விமுறையின் சிறப்பம்சங்களுள் இதுவும் ஒன்று. ஓவியாவுக்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பரம ரசிகரான தளிர் சுரேஷ் உங்கள் பக்கத்தைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். சொக்கன் பக்கத்தை படித்தாயா என்று கேட்டுக் கொண்டே இருப்பார். சுரேஷ் சாரின் பக்கம் போலவே இதுவும் நல்லா இருக்குங்க.

    கலியபெருமாள்

    பதிலளிநீக்கு