வெள்ளி, 16 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 2 (வகுப்பறை)






போன பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடம் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில், அவருடைய வகுப்பறை எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

நம் ஊரில் வகுப்புகளின் பிரிவுகளுக்கு – A,B,C என்று சொல்லுவார்கள். அதாவது 1A, 1B etc.. (இப்பொழுதும் அதே நடைமுறை தான் என்று நினைக்கிறேன்). இங்கு வகுப்பு ஆசிரியர்களின் குடும்ப பெயரின் முதல் எழுத்தைத்தான் அந்தந்த வகுப்புகளின் பிரிவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஓவியாவின் வகுப்பு KT. அதாவது Kinder, பிறகு அந்த வகுப்பாசிரியரின் குடும்ப பெயரின் முதல் எழுத்து.  
  



நான் முதலில் அவருடைய வகுப்பு அறையின் கதவைத்தான் புகைப்படம் எடுத்தேன். வகுப்பிற்குள் படம் எடுக்க அனுமதிப்பாளர்களா என்று ஒரு சிறிய சந்தேகம். சரி, அவர்களுடைய வகுப்பு ஆசிரியையிடம் கேட்டுப் பார்க்கலாம், அனுமதி தந்தால், புகைப்படம் எடுக்கலாம், இல்லையென்றால் இந்த ஒரு புகைப்படமே போதும் என்று நினைத்து, நான் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்த நாளின் மாலையில் ஓவியாவின் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் வகுப்பு தான் கொஞ்சம் அலங்கோலமாக இருக்கும், அது தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறி அனுமதியளித்தார்கள். நான் உடனே வகுப்பிற்குள் சென்று, ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அப்போது அவர்களே, ஓவியாவை கூப்பிட்டு உன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துக்கொள், உன் தந்தை உன்னை படம் எடுப்பார் என்று கூறி ஓவியாவை உள்ளே அனுப்பி, இருக்கையில் அமரச் செய்தார்.  நான் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 



இது தான் அவர்களுடைய வகுப்பு. நாம் துணியை காயப்போடுவது போல், இங்கு மாணவர்களின் படைப்புகளை கயிற்றில் தொங்க விட்டிருக்கிறார்கள். 



ஸ்மார்ட் போர்டு (SMART BOARD )



வகுப்பின் பின் பகுதி. இந்த வகுப்பில் படிக்கும் எல்லா மானவர்களின் புகைப்படத்தை ஒட்டியிருக்கிறார்கள்.  இதில் முதல் படம் தான் ஓவியாவின் படம். நான் இதை புகைப்படம் எடுக்கும்போது, ஓவியா அன்றைக்கு ஏதோ craft செய்திருக்கிறார்கள், அதனை நன்றாக ஒட்டுவதற்காக cellotape எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 



இது ஓவியாவின் ஒரு படைப்பு



இது தான் அவருடைய இருக்கையாம்!!!



ஒவ்வொருவருடைய மேசையின் மீது அவர்களுடைய பெயரை ஒட்டி வைத்திருக்கிறார்கள். 

சரி, அவருடைய வகுப்பைப் பார்த்தாச்சு, இனி வகுப்பில் அவருக்கு எவ்வாறு கல்வியை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

பின் குறிப்பு: வகுப்பில் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை ஓவியா சொல்வதை வைத்து தான் நான் எழுதுகிறேன். 

20 கருத்துகள்:

  1. பள்ள்ளிகூடத்தைப்பற்றி சிறப்பான படங்கள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அசத்தல் படங்களும்................

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பள்ளியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பள்ளி. தலைநகர் தில்லியிலும் குழந்தைகளது படைப்புகளை சுவற்றில் ஒட்டி வைப்பார்கள். அந்த வாரத்தின் சிறந்த மாணாக்கர் என பெயர் எழுதுவார்கள். அனைத்து குழந்தைகளது படங்களும் முகவரியும் ஒரு பக்கத்தில் இருக்கும்.....

    உங்கள் மகளது பள்ளியினைப் பற்றிய மற்ற தகவல்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களுக்கும் விபரங்களுக்கும் நன்றி ! ஓவியா இனி நன்றாக படிக்க வேண்டியது தான் பாக்கி இல்லையா? அதை அவர் செவ்வனே செய்து முடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!

      நீக்கு
  6. ஓவியாவின் பள்ளி ஓவியங்கள் மிக அருமை

    பதிலளிநீக்கு
  7. சிறப்பாக இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பதிவுகள் சிறந்த ஞாபகப்புதையல்கள்

    பதிலளிநீக்கு
  9. அன்பின் சொக்கன் சுப்ரமணீயன் - ஒவியாவின் ப்ள்ளி - வகுப்பறை - ஓவியங்கள் - அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. அன்பின் சொக்கன் சுப்ரமணீயன் - தங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ? cheenakay@gmail.com - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு